குஜராத் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேடு!!!
குஜராத் மாநிலத்தில் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற, 850 மாணவர்களின் தேர்ச்சியை குஜராத் மாநில இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது.
தேர்வில் அதிக மதிப்பெண்
குஜராத் கல்வி வாரியம் சார்பில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அப்ஜெக்டிக் முறை வினாத்தாளும், எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இதில், அப்ஜெக்டிக் தேர்வில், 50 மதிப்பெண்களுக்கு, 40 முதல், 49 மதிப்பெண்கள் வரை மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், எழுத்து தேர்வில், இவர்கள் எடுத்த மதிப்பெண், பூஜ்ஜியம் முதல், மூன்று மதிப்பெண்கள் தான்.
இதையடுத்து, தவூத், மகிசாகர், தாபி மற்றும் சவுராஷ்டிராவின் சில பகுதிகளை சேர்ந்த 100 மையங்களில் இருந்து , 850 மாணவர்களிடம் நேரடி சோதனை நடத்தப்பட்டது. நூறு, நூறு மாணவர்களாக அழைக்கப்பட்டு வாய்மொழியாக கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அந்த மாணவர்களுக்கு, 2+2+2 கூட்டுத் தொகை என்ன என்பது கூட தெரியவில்லை. 'கிரிக்கெட்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, 'ஸ்பெல்லிங்' தெரியவில்லை.குஜராத் மாநிலத்தின் தலைநகர் எது என்ற கேள்விக்கு கூட பதில் தெரியவில்லை. இதையடுத்து, 850 மாணவர்களின் தேர்ச்சியை கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது
Comments
Post a Comment