1,111 BT Appointment via TET Exam - June 8 Certificate Verification


TRB : 1,111 B.T ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு
அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கு
ம் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)