பிளஸ் 2 சான்றிதழில் 'தமிழ்' குழப்பம் 'ஜம்ப்' ஆகும் மாணவர் பெயர்.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், மாணவர் பெயரை தமிழில் குறிப்பிடும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழில் குறிப்பிடும் போது, 'ஷ', 'ஹ' எழுத்துக்களில் இடைவெளி ஏற்படுகிறது;
அதாவது, 'சுதிக்ஷா டி.எஸ்.' என்ற பெயர் 'சுதிக் ஷா டி.எஸ்.' என மாறுகிறது. 'இதேபோல் அசல் சான்றிலும் பெயர் இடம் பெற்றால் குழப்பம் ஏற்படும்' என மாணவர்கள் தவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'இப்பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். எழுத்துரு அமைப்பை மாற்றி குழப்பத்தை தீர்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்' என்றனர்.
பெற்றோர் கூறுகையில், 'உயர்கல்வி சேர்க்கைக்காக அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று குழப்பம் மன உளைச்சலை தருகிறது. அசல் சான்றிதழில் குழப்பத்தை நீக்க வேண்டும்' என்றனர்.
Comments
Post a Comment