பி.எப்., கணக்கில் ஆதார் இணைக்கவரும் 30 வரை கால அவகாசம்
பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இம்மாதம், 30ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான, பி.எப்., கணக்கில், கோடிக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.
டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், நான்கரை கோடி உறுப்பினர்களுக்கு, பி.எப்., நடைமுறையில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
பி.எப்., தொகை பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பி.எப்., ஓய்வூதியர்கள் மற்றும் சந்தாதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணை, பி.எப்., கணக்கில் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
முதலில், ஏப்., 30க்குள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான காலக்கெடு இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment