ஜியோ பாணியில் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: களத்தில் குதித்தது பிஎஸ்என்எல்


பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், 
3 மாதங்களுக்கு இலவச டேட்டா வசதியை வழங்கி பிரிபெய்டு திட்டத்துக்கான ரீசார்ஜ் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

அதிக தகவல்களை வாடிக்கையாளர் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் 4 ஜிபி அளவுக்கு தகவல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்துக்கு 3 மாதங்கள் வரை வேலிடிட்டி. எனவே, வாடிக்கையாளர் அதிக தகவல்கள் குறைந்த கட்டணத்தில் பெற்று பயன்பெறலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)