தமிழ்நாடு காவல்துறையில் வேலை: ஜூலை 3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு....


     தமிழ்நாடு அரசு காவல்துறையின் குதிரைப்படை மற்றும் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள குதிரை பராமரிப்பாளர், சமையல்காரர், தோட்டக்காரர், கட்டுக்கட்டுபவர் பணியிடங்க
ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணியிடம்: சென்னை

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Horse Maintainer (குதிரை பராமரிப்பாளர்) - 28

பணி: Cook (சமையலர்) - 01

பணி: Gardner (தோட்டக்காரர்) - 01

பணி: கட்டுகட்டுபவர் - 01

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300

விண்ணப்பிக்கும் முறை: ஒரு ஏ4 வெள்ளைத் தாளில் விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதரி படிவத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.07.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2017 அன்று காலை 7 மணிக்கு ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்குமணி இலட்சுமிபதி சாலை (மார்ஷல் சாலை), எழும்பூர் சென்னை-08

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolice.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)