இந்த 4 விதிகளை மீறினால் கட்டாயம் உங்கள் லைசென்ஸ் ரத்து.. தமிழக அரசு அதிரடி
சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல் துறை முடிவு செய்ய
ப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிகவேகத்தில் வாகனத்தில் செல்பவர்கள், போக்குவரத்து சிக்னலை மதிக்காதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment