நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் 'பாஸ்' 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி

'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. தேர்வு எழுதியதில், 56 சதவீதம் பேரான, 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். 'டாப்பர்ஸ்' பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர். 


நாடு முழுவதும் உள்ள, 470 மருத்துவ கல்லுாரி களில், 65 ஆயிரத்து, 170 எம்.பி.பி.எஸ்., மற்றும், 308 பல் மருத்துவ கல்லுாரிகளில், 25 ஆயிரத்து, 730 பி.டி.எஸ்., இடங்கள் என, 778 கல்லுாரி களில், 81 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றுக் கான மாணவர்கள் சேர்க்கையை, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' அடிப்படையிலேயே நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
அதனால், 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. நாடு முழுவதும், 10 லட்சத்து, 90 ஆயிரத்து, 85 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதியோரில், 56 சதவீதம் பேர், அதாவது, ஆறு லட்சத்து, 11 ஆயிரத்து, 539 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில், 3.45 லட்சம் பேர் மாணவியர்; ஐந்து திருநங்கையரும் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 11 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.தேசிய அளவில், அதிக மதிப்பெண் பெற்ற முதல், 25 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, நவ்தீப் சிங் என்ற மாணவர், மொத்த மதிப்பெண்ணான, 720க்கு, 697 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலி டம் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாணவர்கள் அர்சித் குப்தா, மணீஷ் முல்சந்தானி ஆகியோர், 
695 மதிப்பெண் பெற்று, இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.முதல், 25 இடங்களில், தென் மாநிலங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தவிர, பிற மாநிலத்தினர் இடம் பிடித்துள்ளனர். அதிலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில மாணவர்களே, அதிக மதிப்பெண் பெற்றுள் ளனர். 
இந்த தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131 மதிப்பெண்களும், இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் மற்றும், முன்னேறிய பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு, 118 மதிப்பெண்களும், மற்ற மாணவர்களுக்கு, 107 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டுள்ளது.
89 சதவீதம் முன்னேறிய வகுப்பினர்
'நீட்' தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், 89 சதவீதம் பேர், முன்னேறிய வகுப்பினர்; மற்ற பிரிவினர், 11 சதவீதம் மட்டுமே. குறைந்த தேர்ச்சி இருந்தாலும், மற்ற பிரிவினருக்கு, 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும்.நீட் தேர்வு முடிவுகள், நேற்று வெளியா யின. தேர்வில், 10 லட்சத்து, 90 ஆயிரத்து, 85 பேர் பங்கேற்றதில், ஆறு லட்சத்து, 11 ஆயிரத்து, 539 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, மொத்த மாணவர்களில், 56 சதவீதம்.
இந்த தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131 மதிப்பெண்ணும், முன்னேறிய வகுப்பினரில், மாற்று திறனாளிகளுக்கு, 118ம் தேர்ச்சி மதிப்பெண் ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னேறிய மற்றும் இதர வகுப்பில் இடம்பெற்ற வர்களில், ஐந்து லட்சத்து, 43 ஆயிரத்து, 473 பேர், 131 மதிப்பெண் முதல், 697 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். அவர்களில், மாற்று திறனாளிகள், 67 பேர், 118 முதல், 130 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த இரு வகையினரையும் சேர்த்தால், மொத்த மாணவர்களில், 89 சதவீதம் ஆகும். முன்னேறிய வகுப்பினரில், பெரும்பாலான மாணவர்கள், 
 'நீட்' நுழைவு,தேர்வு, 6.11 லட்சம் ,மாணவர்கள்,'பாஸ்' ,81 ஆயிரம்,மருத்துவ இடங்களுக்கு,கடும்,போட்டி
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடப்பிரிவு பள்ளிகளில் படித்துள்ளனர்.மீதமுள்ள மிக பின்தங்கிய வகுப்பினர், தலித்மற்றும் பழங்குடியினர் பிரிவு களில், 11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இதில், மாணவர் சேர்க்கையில், மாநில அளவிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதால், முன்னேறிய பிரிவினர் அதிக தேர்ச்சியில் இருந்தா லும், இட ஒதுக்கீட்டு அடிப்படையில், அவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும். ஆனால், குறைந்த தேர்ச்சி இருந்தாலும், மற்ற பிரிவினருக்கு, 69 சதவீத இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்தங்கிய தமிழகம்
'நீட்' தேர்ச்சியில், முதல், 25 இடங்கள் பட்டியலில், தமிழக மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. ஆனால், மற்ற தென் மாநிலத்த வர் இடம் பிடித்தனர். கர்நாடகாவின், சங்கீர்த் சதானந்தா, 692 மதிப்பெண் பெற்று, நான்காம் இடம்; கேரளாவின், டெரிக் ஜோசப் - 691 மதிப் பெண் பெற்று, ஆறாம் இடம்; தெலுங்கானாவை சேர்ந்த, லக்கிம் செட்டி அர்னாவ், 685 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவின், நாரெட்டி மான்விட்டா, 685 மதிப்பெண் பெற்று, 14ம் இடம்; கேரளாவின் நடா பாத்திமா, 684 மதிப்பெண பெற்று, 18ம் இடம்; மரியா பிஜி வர்கீஸ், 682 மதிப்பெண் பெற்று, 21ம் இடம்; தெலுங்கானாவின், மங்கனி தீபிகா, 681 மதிப்பெண் பெற்று, 24ம் இடம் பெற்றுள்ளனர்.
குஜராத் ஆதிக்கம்
மொழி வாரியாக, ஆங்கிலத்தில், 9.13 லட்சம்; ஹிந்தி, 1.20 லட்சம்; தெலுங்கு, 1,766; அஸ்ஸாமிஸ், 3,810; குஜராத்தி, 47,853; மராத்தி, 978; தமிழ், 15,206; வங்காளம், 34,417; கன்னடம், 712; ஒரியா, 452 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 
அதாவது, ஆங்கிலத்தில், 80.16 சதவீதம்; ஹிந்தியில், 10.59 சதவீதம் பேர் என, இந்த இரு மொழிகளில், மொத்தம், 90.75 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். உள்ளூர் மொழிகளில், 9.25 சதவீதம் பேர் மட்டுமே, நீட் தேர்வை எழுதி உள்ளனர். அதிலும், குஜராத் மொழியில் அதிக மாணவர்கள், அதாவது, 4.20 சதவீதம் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)