அரசு ஊழியர்களுக்கு செக்.. செயல்திறன் ஆராய புதிய முறை..!
புரோபட்டி, ஸ்பார்ரோ மற்றும் சால்வ் (தீர்த்தல்) என்ற இந்த மூன்று வார்த்தைகளில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு வைத்திருக்கும் செக் வைத்துள்ளது. இது என்ன என்று குழப்பமாக உள்ளது அல்லவா?
மத்திய அரசு ஊழியர்கள் இணையவழி போர்டல்கள் மூலமாகச் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்கின்றது. அது எப்படிச் செயல்படும் என்பதைப் பற்றி இங்கு விளக்கமாக நாம் பார்ப்போம்.
ஆன்லைன் ப்ராபிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம்
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அன்மையில் தான் 'ஆன்லைன் ப்ராபிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்பதை அறிமுகம் செய்து அமைச்சகங்களுடன் இணைந்து அரசு அதிகாரிகளின் மதிப்பீடுகளை அளவை ஆராயத் துவங்கியது.
கூடுதல் முடிவு
மத்திய அரசு கூடுதலாக 50 அல்லது 550 வயது உடைய 30 வருடம் அரசு பணிகளில் இருந்த ஊழியர்களின் திறனை ஆராய்ந்து அதில் குறைவாக இருப்பின் அரசுப் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.
எதற்காக இந்த இணைய முறை
செயல் திறன் பரிசீலனைக்கு உட்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதால், இதனால் அமைச்சகங்களுக்கு அதிக ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமைச்சகத்தின் இந்தப் பணிகளைக் குறைக்கும் விதமான இந்தப் பிராபிட்டி போர்ட்ல முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி இணையதள வாயிலாகப் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
பிராபிட்டி மூலமாக ஊழியர்களின் சென்சிட்டிவ் மற்றும் நான் செசிடிவ் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை செயல் திறன் பரிசோதனை செய்யப்படும்.
ஸ்பேரோவ்
ஸ்பேரோவ் மூலமாகச் சம்பள உயர்வு அறிக்கை போன்றவை இணையதளம் வாயிலாகக் கண்காணிக்கப்படும்.
சால்வ்
குழு அளவிலான ஊழியர்களிடம் இணையதளம் மூலமாக நடத்தப்படும் இணையதள விசாரணை செய்யும் முறையாகும்.
129 ஊழியர்கள்
இதன் படி கடந்த சில மாதங்களில் குரூப் ஏ பிரிவில் 30 பேரையும், குரூப் பி பிரிவில் 99 பேர் என மொத்தம் 129 மத்திய அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என்ற பெயரில் பணியை விட்டு நீக்கியுள்ளது மத்திய அரசு.
ஆய்வு
இந்த அறிவிப்பை வெளியிடும் முன் மத்திய அரசு குரூப் ஏ பிரிவில் 24,000 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,251 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்து அதன் பின்னரே 129 ஊழியர்களை வேலையை விட்டுத் துரத்தியுள்ளது.
அடுத்தத் திட்டம்
இந்நிலையில் மத்திய அரசு அடுத்தகட்ட திட்டமாகக் குரூப் ஏ பிரிவில் 34,451 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,521 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த ஆய்வில் non-performersஆகக் கருதப்படும் ஊழியர்கள் நிச்சயமாகப் பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வு
மத்திய அரசு பொதுவாக அரசுப் பணியாளர்களின் செயல்திறன் குறித்த ஆய்வைப் பணியில் சேர்ந்து 15 வருடத்திலும், அதன் பின் 25 வருடத்திலும் ஆய்வு செய்வார்கள்.
இதனை ஒவ்வொரு வருடமும் செய்தால் அரசு சேவைகள் மிகவும் வேகமாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
Comments
Post a Comment