ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா? - தமிழக ஓட்டுக்கள் எவ்வளவு?
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.
அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இதில் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுக்கு வாக்குரிமை இல்லை. (உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர், ரேகா, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள், மேலும், உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் எம்.எல்.சி.க்கள் (சட்டப்பேரவை மேலவை) இருப்பார்கள் அவர்களால் வாக்களிக்க முடியாது!)
நாடு முழுவதும் 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 776 எம்.பி-க்கள் உள்ளனர்.
இவர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்.
1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.
இதன்படி 776 எம்.பி-க்களின் ஒட்டு மொத்த வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474 ஆகும்.
தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு 41 ஆயிரத்து 184 என்பது குறிப்படத்தக்கது.
50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுவார். (5,49,408 5,59,474=10,98,882)மொத்தமுள்ள 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 வாக்குகளில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் பெறுவோர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
Comments
Post a Comment