மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா? சேர்க்கை நிலவரம் என்ன?

மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா? சேர்க்கை நிலவரம் என்ன? உண்மை நிலை விளக்கமும், எமது கணிப்பும் !!
1) தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மொத்த படிப்பு இருக்கைகள்   (Govt college seats) = 3,050

2) இதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு இருக்கைகள் (All India Quota seats) = 456
3) மீதமுள்ள, 85 சதவீத மாநில  ஒதுக்கீட்டு இருக்கைகள் (TN govt seats) = 3,050 - 456 = 2,594
4) இந்த 2594 இருக்கைகளில், மாநிலப் பாடத்திட்ட ஒதுக்கீட்டு இருக்கைகள் (85 சதவீதம்) = 2,203
5) CBSE உள்ளிட்ட பிற பாடத்திட்ட ஒதுக்கீட்டு
இருக்கைகள் (15 சதம்) = 391

6) மேற்கூறிய அனைத்தும், அரசுக் கல்லூரி இருக்கைகள் என்பதை நினைவில் கொள்ளவும்.
இது போக,  சுயநிதிக் கல்லூரிகள் கொடுக்க வேண்டிய அரசு இருக்கைகள் = 664

மொத்த இருக்கைகள் = 2,594+664=3,258

இத்தகவல்கள் அனைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்த  அதிகாரபூர்வமான தகவல்கள் ஆகும்.

7) அரசு (2,594+664) இருக்கைகள் மொத்தம் 3,258 இடங்கள் இருந்தாலும், இங்கு சேர்க்கை குறித்து நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் இருக்கைகள் = 2,203 மட்டுமே. இந்த 2,203 இடங்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளின் மாநிலப் பாடத் திட்ட இருக்கைகள் ஆகும்.
8) இந்த 2,203 இடங்களும் பின்வருமாறு
இடஒதுக்கீடு முறையில் வழங்கப்படும்.

அ) திறந்த போட்டி (OPEN) 31% = 683
ஆ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் BC 30% = 661
இ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் MBC 20% = 441
ஈ) பட்டியல் சாதியினர் SC 18% = 396
உ) பழங்குடியினர் ST 1% = 22

ஆக மொத்தம் = 2,203 இருக்கைகள்.

10) சேர்க்கை கிடைக்குமா என்று கணக்கிடும் முறை:
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மாணவருக்கு சேர்க்கை கிடைக்குமா என்று பரிசீலிப்பதற்கு,
அ) அவரின் நீட் மதிப்பெண்
ஆ) அவரின் சாதிக்குரிய (community) ஒதுக்கீடு ஆகிய இரண்டு காரணிகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

உதாரணமாக,
ஒரு BC மாணவர் என்றால், மொத்தமுள்ள 2,203 இடங்கள், அவரைப் பொறுத்து, 1344 இடங்களாகச் சுருங்கி விடும். அதாவது MBC/SC/ST இடங்களான 859 இடங்களுக்கு  அவர் போட்டியிட இயலாது.

மேலும், BC க்குரிய 30 சதம் இருக்கைகளில் 3.5 சதவீதம் முஸ்லீம் மதத்தினருக்குச் சென்று விடும். அதாவது, BCக்குரிய இருக்கைகளான 661இல் முஸ்லிம்களுக்கு 77 இருக்கைகள் ஒதுக்கப் படுகின்றன. இது போக, மீதியுள்ள 584 இருக்கைகளுக்கு மட்டுமே (26.5%) முஸ்லீம் அல்லாத ஒரு BC போட்டியிட இயலும். கணக்கிடும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தம் 740 பேர் உள்ளனர். இவர்களுக்கு ceteris paribus உறுதியாக இருக்கை கிடைக்கும். இவர்களுக்கு கிடைத்த இருக்கைகள் போக, மீதியுள்ள இருக்கைகள் 400க்கு குறைவாக எடுத்தவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எமது முதல்கட்டக் கணிப்பு!
-----------------------------------------------------
1) பொதுவாக, ceteris paribus,  நீட்டில் 225 மதிப்பெண் அல்லது percentile score 75 உள்ள மாணவர்களுக்கு, அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இருக்கைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
2) 300 மதிப்பெண் அல்லது percentile score 85 உள்ள மாணவர்களுக்கு அரசுக் கல்லூரி இருக்கைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
3) இக்கணிப்பு தோராயமானதே. மாநில அரசு வெளியிடும் தரவரிசைப் பட்டியல் வெளிவந்த பின்னரே, இன்னும் நெருக்கமான தோராயத்துடன் (still closer approximation) கணிக்க இயலும்.
4) இது ஒரு OPTIMISTIC கணிப்பு.



பின்குறிப்பு:
1) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 3ஆம் பாலினரையும் குறிக்கும்.
2) CETERIS PARIBUS = other things remain constant.
(நீதிமன்றத் தீர்ப்புகளாலும் பிற காரணிகளாலும் நிலைமை  மாறக்கூடும்).

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)