'கேம்பஸ் அம்பாசிடர்கள்' நியமிக்கப்படுகின்றனர்
இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களாக சேர்க்க கல்வி நிறுவனங்களில் 'கேம்பஸ் அம்பாசிடர்கள்' நியமிக்கப்படுகின்றனர்
.
தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கைக்கும் பெருமளவில் வித்தியாசம் உள்ளது.
இதனால் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் விடுபடாமல் அதிக எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் ஜூலை 1 முதல் 31 வரை நடக்கிறது. இதில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் பிழைகள் திருத்த பணி நடக்கிறது.
ஜூலை 9 மற்றும் 23ல் அனைத்து பூத்களிலும் இதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. பூத் அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெறுவர்.
நியமனம்
கல்லுாரி, பாலிடெக் னிக், ஐ.டி.ஐ.,க்களில் 18 வயது பூர்த்தியான இளைஞர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒரு கல்லுாரிக்கு இரு மாணவர்கள் வீதம் இளைஞர்களை வாக்காளராக சேர்க்க 'கேம்பஸ் அம்பாசிடர்' (வளாக துாதுவர்கள்)நியமக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு ஆர்.டி.ஓ.,க்கள் இரண்டு நாள் பயிற்சி அளிக்கின்றனர். அதன்பின் வாக்காளர் சேர்த்தலில் ஈடுபடுவர். என தேர்தல் கமிஷன் வலியுறுத்தி
உள்ளது.
Comments
Post a Comment