முதுநிலை ஆசிரியர் நியமனத்தில்,இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்
முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றி
ல், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.
Comments
Post a Comment