தங்கமயமான உலகின் முதல் ஏ.டி.எம்.!!!
உலகளவில், ஏ.டி.எம்., இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்து, 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இதை கொண்டாடும் வகையில், உலகின் முதல் ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது.
1967 ம் ஆண்டு
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஷெப்பர்டு பாரோன் என்பவர் தான் ஏ.டி.எம்., இயந்திரத்தை கண்டுபிடித்தார். உலகின் முதல் ஏ.டி.எம்.,இயந்திரம், வடக்கு லண்டனில், என்பீல்டு என்ற இடத்தில் உள்ள பர்கிலேஸ் வங்கி கிளையில், 1967 ம் ஆண்டு ஜூன், 27 ம் தேதி அமைக்கப்பட்டது.
'டிவி' நடிகர் ரெக் வார்னே என்பவர் தான் முதன் முதலில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்தார். இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது உலகளவில், 30 லட்சம் ஏ.டி.எம்., இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, லண்டன் பர்கிலேஸ் வங்கி கிளையில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த இயந்திரத்திற்கு முன்பு, சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment