பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.! புதிய ஆப்பை வெளியிடும் ஐஓசி!

Petrol Rate - New Android App will launch by IOC
இந்தியாவில் முதல் கட்டமாக 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், நாடு முழுவதும் வருகின்ற 16ம் தேதி முதல் இந்த நடைமுறையை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
இதனை வாடிக்கையாளர் தெரிந்து கொள்வதற்கு வசதியாக எண்ணெய் நிறுவனங்கள் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 
fuel@IOC என்ற ஆப் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு வேளை ஸ்மார்ட் போன் இல்லாத வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும் விலையை தெரிந்து கொள்ளலாம். 
இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போனில் RSP DEALERCODE  என டைப் செய்து இந்த 9224992249 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அன்றை விலை நிலவரம் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)