பார்வையற்ற செவித்திறன் குறைபாடு மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு வளமையம்
பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:
* மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு இல்லங்களில் தொழிற்பயிற்சி மேற்கொள்ள ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 6 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தாய்மார்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க கணினி கொள்முதல் ரூ.12.48 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
* பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களையும் குழுக்களாக அமைத்து உதவுவதற்கான வளமையம் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* செவித்திறன் குறையுடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சைகை மொழிப்பாளரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய ரூ.1.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.
* ரூ.4.50 லட்சம் செலவில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 6 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளில் மனவளர்ச்சி குறைகள் இருப்பதை கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படும்.
Comments
Post a Comment