நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். இவர்களில்
, 1,380பேர் ராஜினாமா செய்துள்ளனர்; மீதமுள்ள, 15 ஆயிரத்து, 169 பேருக்கு, ஐந்து ஆண்டுகளாக, மாதம், 7,000ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், ஓவியம், இசை, கம்ப்யூட்டர் சயின்ஸ், தோட்டக்கலை என, பல்வேறு பாடப்பிரிவுகளில், வகுப்புகள் நடத்துகின்றனர். இவர்களில் பலர், முதுநிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை முடித்து, பேராசிரியர் பணிக்கும் தகுதியாக உள்ளனர். பலர், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வும் முடித்துள்ளனர்.
Comments
Post a Comment