அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்?
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா?
என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு பள்ளியில் தொடங்கிய ஆங்கிலவழி வகுப்புகளை தமிழ்வழி ஆசிரியரே நடத்துகிறார் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பகுதி நேர தொழில் செய்வது வேதனை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அரசு கட்டாயம் ஆக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments
Post a Comment