அரசு நர்ஸ்களுக்கான சீருடையில் மாற்றம்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்களின் சீருடையை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில், பணியாற்றும் செவிலியர்களுக்கு, ஆங்கிலேயர் காலத்தில்
அறிமுகமான குட்டை பாவாடை போன்ற சீருடை தற்போது வரை உள்ளது.
இந்த சீருடை, சவுகரியமாக இல்லை என, நர்ஸ்கள் கருத்து தெரிவித்தனர். அதையடுத்து, சீருடையை மாற்றம் செய்ய, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
மூத்த நர்ஸ்களுக்கு வெள்ளை பேன்ட், சட்டை, மேல்கோட், தொப்பி மற்றும் ஷூ
ஆரம்பநிலை நர்ஸ்களுக்கு வெள்ளை சேலையுடன் மேல் கோட், தொப்பி, ஷூ மற்றும் கிரேட், 1,2,3, வழங்கப்பட உள்ளது.
ஆண் நர்ஸ்களுக்கு வெள்ளை பேன்ட், சட்டை, தோளில் பட்டையுடன் மேல்கோட் என, சீருடையை மாற்ற, தமிழக அரசு செவிலியர்கள் சங்கம், சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதையேற்று, சீருடையில் விரைவில் மாற்றம் கொண்டுவர, அரசு முடிவு செய்துள்ளது.
Comments
Post a Comment