அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...!!


1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை சீர்படுத்துங்கள்.


2. மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்து கொண்டு வருவதில்லை என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட சவாலாய் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்...

3. எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கச் சொல்லி பயிற்சி கொடுங்கள்..


4. தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய் பழைய தமிழ் செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு வரச் செய்யுங்கள். இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் நிலைநிறுத்த பயன்படும்.

5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்

6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலி நடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு வாய்ப்பு கொடுங்கள்...

7.  வாய்ப்பை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து, அவர்களையும் வாசிக்க வைத்து, ஒழுங்குபடுத்தி, வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...

8. தொலைக்காட்சி செய்தி வாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப் படுத்துங்கள்.

9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப் படுத்தி பாராட்டுகளை பெற்றுக் கொடுங்கள்..

10. பரிசுகளை வழங்குங்கள்.

*விதை முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, மீண்டும்துளிர்விட்டோ, இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, காய்விட்டே கனியாகிறது..*

இதே போலதான் மாணவர்கள் உங்களுக்கு எந்த நிலையிலும் எந்த கலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும், விதண்டா வாதத்தையும் விட்டு விட்டு...நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய் வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தைத துவக்குங்கள்...
*நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்...

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank