Cell Phones Not Allowed in UPSC Exams
'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்,தேர்வு மையத்திற்குள்,
மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தால், அவர்கள் எதிர்காலத்திலும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுபணியாளர் தேர்வு வாரியம்எச்சரித்துள்ளது.
இது குறித்து. யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ள தாவது: சிவில்சர்வீஸ் எனப்படும் மத்திய அரசு பணிகளுக்கான முதல்கட்ட தேர்வு, ஜூன் 18ல்
நடக்கிறது.இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்குள்,
கண்டிப்பாக, மொபைல் போன், புளுடூத் கருவிகள்,
லேப்-டாப் உள்ளிட்ட, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எதையும் கொண்டு வரக்கூடாது; இதற்கு முழுமை யாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்திற்குள், எலக்ட்ரானிக்ஸ்பொருட்கள்
எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்க ள் எதிர்காலத்திலும் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள்; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment