Internet Data Recharge with 1 Year Validity Must - TRAI
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்
' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதை, மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில், ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அத்துடன் அந்த திட்டமானது அதிக அளவு டேட்டா பயன்பாடு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் தொலை தொடர்பு சேவையை விரிவு படுத்தும் பொருட்டும், டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும், ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்;என்று எதிர்பார்க்கிறோம்.
ட்ராய் அமைப்பானது இது தொடர்பாக விரைவில் மொபைல் சேவை நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. அலைபேசி நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தினை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment