NEET Exam Case - நீட் முடிவு வெளியிட தடை : சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ முறையீடு!


டெல்லி : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்துள்ளது.



நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 8 மொழியில் நடத்தப்பட்டது. இதில் மாநில மொழியான தமிழில் கேட்கப்பட்ட நீட் கேள்விகள் கடினமாக இருந்ததாக சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் மே 24ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது. ஆங்கிலம், இந்தியில் கேள்விகள் எளிதாகவும், தமிழில் கடினமாகவும் கேட்கப்பட்டதால் ரேங்க் முறையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு மருத்துவ இடம் பறிபோகும் என்று மாணவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வினாத்தாள் கடினமானதாக இல்லை என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் முடிவுகளை வெளியிட மதுரைக் கிளை தடை விதித்ததால், நேற்று முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தடையை நீக்கக் கோரி சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாததால் 12 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கக் கோரியுள்ளது, மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒரே மாதிரியான கேள்விகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி குஜராத் உள்ளிட்ட வேறு மாநிலங்களிலும் நீட் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி நீட் தேர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போதும் தடை நீட்டிக்கப்பட்டால் முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்படும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவை சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கிறது. பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் மாறுபாடுகள் இருந்ததாக சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு மேலும் பலம் சேர்த்துள்ளன. உச்சநீதிமன்ற தலையீட்டிற்குப் பின்னர் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஜூன்13ம் தேதிக்குப் பிறகு நீட் முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இமுடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)