"PF" CALCULATION METHOD


உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கா
லத்தில் பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் தருவோர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்து வட்டியுடன் ஒய்வின் முடிவில் தொழிலாளர்களுக்கு திருப்பி தரப்படும் . இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்ப பெற்று கொள்ளலாம்
1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் சேமநல நிதி திட்டத்துடன் சேர்த்து இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் இதனை செயல்படுத்தி வருகிறது .   ஒரு தொழிலாளரின் சம்பளம் ரூ. 15000 க்கு கீழ் எனில்  பிஎப் கட்டாயம். ஆனால் தொழிலாளரின் சம்பளம் ரூ.15000க்கு மேல் எனில் தொழிலாளர் விருப்பப்படாவிட்டால் பிஎப் பிடிக்க தேவையில்லை.  
தொழிலாளர் வாங்கும் சம்பளம் மற்றும் இதர படிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும். பிஎப் பணத்துக்கு  ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணமாக:
 ஒருவர் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி(டிஏ) சேர்த்து ரூ.25000  வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து 12 சதவீதம் அதாவது  ரூ. 3,000  பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படும்.  இதேபோல் நிறுவனமும் ரூ. 3,000 பணத்தை செலுத்தும்.  
ஆனால் அதில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. 25000 ரூபாயில் 3.67 சதவீதம் அதாவது ரூ. 917.50  பணத்தை தொழிலாளரின் பங்களிப்பாக அவரது கணக்கில் நிறுவனம் சேர்க்கும் . 
இதேபோல் 25 ஆயிரம் ரூபாயில்  15 ஆயிரம் ரூபாயை கழித்துபோக மீதமுள்ள 10000த்தில் தான்  8.33 சதவீதம் பணத்தை (ரூ.832.50 காசு தான்)  தொழிலாளரின்  வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படும். ஆக மொத்தம் அவரது கணக்கில்   நிறுவனம் சார்பாக ரூ. 917.50+ரூ.832.50 சேர்த்து 1750 மாதந்தோறும் சேர்க்கப்படும்.  
நில்லுங்க... 3000 ரூபாய் வர வேண்டுமே ஆனால் ரூ1750 தானே போடுகிறார்கள் என்று தோன்றுகிறதா?  ஏனெனில் மீதமுள்ள 1250 ரூபாய் பென்சன் திட்டத்துக்கு போய்விடும். அதுவும் கணக்குல சேர்த்துக்குவாங்க.
எனவே ஓராண்டு முடிவில் அவர் கணக்கில் உள்ள பணத்துக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்  இதேபோல் 8.65  வட்டி வழங்கப்படும்.  இப்ப கணக்கு போட்டு பாருங்க உங்க பிஎப் கணக்குல எவ்வளவு வரும்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
பணத்தை எப்படி எடுப்பது?
ஒருவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். 
ஒருவர் பணியில்  இருந்து விலகிய பின்னர் 60 நாட்களாக வேலையில்லாமல் இருந்தாலோ, அல்லது  பிஎப் வசதி உள்ள நிறுவனத்தில்   வேலை செய்யாமல் இருந்தாலோ ,  பிஎப் கணக்கை முடித்துக்கொண்டு மொத்த பணத்தையும் எடுக்கலாம். ஆனால் வேலையில் இருக்கிறார் என்றால், அவர் 57 வயதில் தான் 90 சதவீத பணத்தை எடுக்க முடியும். இதேபோல் 58 வயதில் மீதமுள்ள 10 சதவீத பணத்தை எடுக்க முடியும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)