அரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB ல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு - ஒரு பார்வை...
நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் PG TRB ல் 10./. இட ஒதுக்கீட்டை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருக்கிறது.
ஊதிய முரண்பாட்டை மிகத்தெளிவாக உணர்ந்து தங்கள் உரிமையை மீட்க போராட்டக்களங்களிலும் சமூக வளைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் 2009 க்கு பிறகான இடைநிலை ஆசிரியர்களை ஈடுக்கட்டும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதை இந்த அரசாணை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.இந்த முயற்சியை பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் இது 2009 பிறகான இ.ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.எனவே அரசுக்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் போயிருப்பதாகவே தெரிகிறது.இதை கருத்தில் கொண்டே அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.
இது கண்டிப்பாக 2009 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே பயன்படும் காரணம் 2009 க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களின் ஊதியமான(9300-4800) மற்றும் அகவிலைப்படி இவற்றை சேர்த்து மொத்த ஊதியத்தை விட அதிகமாகவே தற்போது பெறுகிறார்கள் ஆனால் 2009 பிறகான இ.ஆசிரியர்களின் ஊதியத்தின் நிலைமை நாம் யாவரும் அறிந்ததே!
ஆகவே எனதருமை இ.ஆசிரிய தோழர்களே அரசின் இந்த அறிவிப்பாணை நமக்கெல்லாம் சிறதளவு மகிழ்ச்சி தான் எனிலும் அரசின் இந்த ஈடுசெய்யும் முயற்சியை நாம் கவனமாக உற்றுநோக்க வேண்டும்.நாம் ஊதிய முரண்பாடில்லாமல் நமக்கான ஊதியமான (9300-4200) அப்போதே பெற்றிருந்தால் இப்போது முதுகலை ஆசிரியர்களின் மொத்த சம்பளத்தை விட 10 ஆயிரம் கூடுதலாக பெற்றிருப்போம்.
எனவே தமிழக அரசை நம் கல்வித்தகுதிக்கான ஊதியத்தை தருமாறு வேண்டும் போராட்டங்களை இன்னும் தீவிரமாக முன்னெடுப்போம் வாருங்கள்.நமக்கு போராட்டத்தை பற்றி சிந்திக்கும் எண்ணத்தை மாற்றி தேர்வு பற்றி சிந்திக்கும் எண்ணத்தை அரசு உருவாக்கியிருப்பதை தயவுசெய்து உணர்ந்துக்கொள்க.
இந்த அரசாணை ஏன் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குகிறது?
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் 10./.வழங்க வில்லை?
காரணம் இது தான் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் இடையில் சம்பள வேறுபாடு வெறும் ரூ 200.ஆனால் இ.ஆசிரியர்களுக்கும்(2009 பிறகான) மு.ஆசிரியர்களுக்கும் இடையில் சம்பளவேறுபாடு 13000/-
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை காரணம் அவர்களின் சம்பளம் மு. க.ஆ- க்கு நிகரானது.பாதிக்கப்பட்ட இ.ஆ- களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவோம் என அரசு முடிவெடுத்திருக்கிறது.எனவே நம் பாதிப்பை அரசு உணர்ந்துவிட்டதை
அரசுக்கு நம் இழப்பு தெரிந்து விட்டதை இதன் மூலம் மிகத்தெளிவாக உணரலாம்...
Comments
Post a Comment