SSC Are you ready to Online Apply?
சுமார் 25 – 30 வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஸ்டாஃப் ஸெலக்ஷன் கமிஷனின் தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற்று டெல்லியில் வேலைக்குப் போன தமிழர்கள் ஏராளம்.
ஆனால் இப்போது தலைகீழாகப் போய் பீஹாரிலிருந்தும் ராஜஸ்தானிலிருந்தும் ஏராளமானவர்கள் தமிழகத்தில் வேலைக்கு வந்து இங்கயே நிரந்தரமாகத் தங்கி விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராயப் போவதில்லை நான்.
பட்டதாரி இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. Staff Selection Commission நடத்தும் Combine Graduate Level Examination, 2017 க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 16.05.2017 முதல் 16.06.2017 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கட்டணம் -- வெறும் நூறு ரூபாய்கள்தான். தேர்வு அப்படி ஒன்றும் கடினமானதல்ல. முதல் நிலை 10வது தரத்திலும் இரண்டாம் நிலை 12வது தரத்திலும் இருக்கும். எல்லாமே அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள். தேர்வையும் ஆன்லைனில் கம்ப்யூட்டரில்தான் எழுத வேண்டும். மூன்றாம் நிலை மட்டுமே பேப்பரில் எழுத வேண்டும். இது ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் உங்களது மொழி அறிவைச் சோதிக்கும் ஒரு தேர்வு.
இதற்காகக் கொஞ்சம் பயிற்சி செய்தால் போதும். துவக்க நிலையிலேயே சம்பளம் 60000 – 70000 வரை ( நாலு பூஜ்யம்தான், சந்தேகம் வேண்டாம்). இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பதியலாம். உங்களது பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம், உங்கள் கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் புகைப்படத்துக்கு 30-50 கேபி, கையெழுத்துக்கு 1-12 கேபி என்ற வரையறை உள்ளது. அதற்கேற்ப எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை, 46 பக்கங்கள், நன்றாகப் படிக்கவும். http://www.ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CGLE2017Notice.pdf
நல்ல வாய்ப்பு…. நல்ல சம்பளம்…. அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே தமிழகத்திலேயே வேலை கிடைக்கும். மற்றவர்கள் டெல்லி உள்ளிட்ட பிற பகுதிகளுக்குப் போக வேண்டியிருக்கும். 25000 சம்பளத்திற்கு ஐ டி கம்பெனியில் எங்கு வேலை கொடுத்தாலும் போகிறேன் என்று நிலையில் 60000 ரூபாய் சம்பளத்திற்கு எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று நினைக்கிறேன்.
நான் சரியாகப் பயிற்சி எடுக்கவில்லையே என்ற பயம் வேண்டாம். முதல் முறையாக இருந்தாலும் இதனை ஒரு ட்ரயல் போல எடுத்துக் கொண்டு அடுத்த வருடப் பரிட்சைக்குத் தயாராகலாமே….
வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment