இனி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாது. 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் அழிக்கப்படவிருக்கிறது
தற்போது 2000 ரூபாயின் மதிப்பும் அழிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பணமதிப்பழிப்பு
ஜூன் 26ஆம் தேதி, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுமா அல்லது அதற்கு பதிலாக 1000 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுமா என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பின. அதற்கு அருண் ஜெட்லி தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. பிறகு கேள்வி பதில் நேரத்தில் நரேஷ் அகர்வால் எம்.பி பேசுகையில், “2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் அழிக்கப்படவிருக்கிறது. இனி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாது. இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
இதுவரையில் 3.2 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டுள்ளது. இப்போது இந்த நோட்டுகள் அச்சிடப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இப்போது இரண்டாவது முறையாக பணமதிப்பழிப்பு நடவடிக்கை பற்றி பேச்சுகள் எழுகிறது. இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரிய விளக்கமளிக்க வேண்டும்.
Comments
Post a Comment