மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை- அமைச்சர் மகேஷ் சர்மா !!
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ராஜ்யசபாவில் கலா
ச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ராஜ்யசபவில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்தார்.
கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுக்கும் முற்பட்டவை என்று கூறினார் மகேஷ் சர்மா. கீழடியில் கிடைத்த 2 பொருளையும் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Keezhadi Excavation Head Was Transferred to Assam
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 தொன்மம் மிக்க பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் கீழடிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்று தெரிவித்திருந்தார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)