பிளஸ் 2அசல் சான்றிதழை, மத்திய அரசின் இணையதளத்தில், 'டிஜிட்டல்' முறையில் பதிவிறக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 10 முதல், பள்ளிகளில், அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதேபோல, மத்திய அரசின் மின் ஆவண காப்பகத்தின், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில் சான்றிதழை, இன்று முதல் பதிவிறக்கலாம்.மாணவர்கள், 'ஆதார்' எண்ணுடன் இணைந்த மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, இணையதளத்தில் கணக்கு துவங்க வேண்டும். ஆதார் எண்ணில் மொபைல் போன் இணைக்கப்படாமல் இருந்தால், இ - சேவை மையத்தில் இணைத்து கொள்ளவும். கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment