+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு

+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்



கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது.

இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும்.
ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் ஐ.டி.ஐ. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
மேலும் 450 மையங்களில் பல்வேறு பொது தேர்வுகளை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022