பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி


பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 


இதன்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பசுமை திறனாய்வு வளர்ச்சி நிகழ்வு' என்ற பெயரிலான அந்த திட்டத்தில் 'இயற்கை வழிகாட்டி (Nature's Guide' எனும் பயிற்சிப் பணிஉருவாக்கப்பட்டுள்ளது. 10 -ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியைமுடிப்பவர்கள் நம் நாட்டின் சுற்றுலா தலங்கள், வனம் மற்றும் வனவிலங்கு சரணலாயம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி யாக பணியாற்ற முடியும். இந்திய விலங்கியல் ஆய்வகம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வகம் ஆகியவை சார்பில், 10 மாவட்டங்களில் மட்டும் முதற் கட்டமாக இது அறிமுகப்படுத்தப் பட உள்ளது. இதற்காக, டேராடூன், தென் சிக்கிம், இட்டாநகர், புனே, அலகாபாத், ஜோத்பூர், வடக்கு 24 பர்கனாஸ், தென் அந்தமான், கோழிக்கோடு மற்றும் கோயம் புத்தூர் ஆகிய 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கைலாஷ்சந்திரா 'தி இந்து'விடம் கூறும்போது,"உயர்கல்வியை தொடர முடியாதவர்களுக்கு இந்த வழிகாட்டிக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுபோன்ற வர்கள் புதிய வகை திறனாய்வு பயிற்சியை பெற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதில் செயல் விளக்க வகுப்புகள் மற்றும் களப்பயிற்சி என 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வனம், வனவிலங்குகள் மற்றும் புலிகள் சரணாலயம் ஆகியவற்றில்வழிகாட்டிகளாக பணியாற்ற முடியும்" என்றார்.
இயற்கை, தாவரம் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சிக் காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் பெறும் இவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பணி கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய தாவரவியல் ஆய்வகத் திலும் அவர்களுக்குபயிற்சி அளிக்கப்படுவதால் அவர்கள், தோட்டக்கலை மற்றும் பயிர்கள் பாதுகாப்பு தொடர்புடைய அரசு பணிகளிலும் சேர வாய்ப்புள்ளதாகக் கருதப்படு கிறது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)