தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 டெக்னிக்கல் உதவியாளர், கள உதவியாளர்கள் வேலை

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
(தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 300 டெக்னிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல், 400 கள உதவியாளர் (பயிற்சி) என 700 பணியி
டங்களை நேரடித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளது.
பணி: Technical  Assistants/Electrical
காலியிடங்கள்: 300
பணி: Field Assistants(Trainee)
காலியிடங்கள்: 400
நேரடி நியமனம்: மின்சார வாரியத்தில் எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுகிறார்கள். அந்த வகையில், 700 பணியிடங்களும் நேரடி தேர்வு மூலம் நியமிக்க மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு மட்டும் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. இந்த பணியிடங்களுக்குரிய தேர்வுக்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மின்சார வாரியத்தின் இணையதளத்திலும் (www.tangedco.gov.in) அறிவிப்பு வெளியாகும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/linkpdf/BPTA.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank