ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி?

HOW TO ORDER "FREE RELIANCE JIO PHONE"

ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி?



ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.செப்டம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் ஜியோபோன் சரியான விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜியோபோனினை செப்டம்பர் மாதத்திற்குள் முன்பதிவு செய்ய முடியும்.புதிய ஜியோபோனினை மை ஜியோ செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஜியோபோன் வங்குவோர் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அதன்பின் முதலில் முன்பதிவு செய்தோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விற்பனை துவங்குகிறது.
ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ஜியோபோன் விலை ரூ.0 எனஅறிவிக்கப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்கள் திரும்ப வழங்கப்படும் தொகையாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகை மூன்று ஆண்டுகளுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் இயங்கும் ஜியோபோன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
 டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருப்பதால் வாய்ஸ் கமாண்ட் மூலம் போனினை இயக்க முடியும். இத்துடன் 24 மொழிகளை இயக்கும் வசதியும், 5 எண் அழுத்திப் பிடித்தால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் ஜியோபோனில் என்எஃப்சி வசதியை வழங்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான மென்பொருள் அப்டேட்வழங்கப்படம் இருக்கிறது. மேலும் ஜியோபோனில் பயன்படுத்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)