தனியார் மருத்துவமனைகளில் இலவச அறுவைசிகிச்சை!
முக்கியமான அறுவைசிகிச்சை செய்ய அரசு மருத்துவமனைகளில் நேரம் கிடைக்கவில்லை என்றால், தனியார் மருத்துவமனைகளிலேயே இலவசமாக அறுவைசிகிச்சை செய்து கொள்ளலாம்’ என்று டெல்லி முதல்வ
ர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று ஜூலை 8ஆம் தேதி மருத்துவத் திட்டம் ஒன்றை தொடங்கிவைத்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவைசிகிச்சைகளுக்குத் தேதி கிடைக்காமல் நீண்ட நாள்களாக காத்திருக்கும் நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு, அரசு செலவில் இலவச அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படும். நோயாளிகளின் பொருளாதார தரத்தைப் பார்க்காமல், சிறந்த மருத்துவ வசதிகளைச் செய்து தரவே இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்.
டெல்லி, நொய்டா, குர்கவான், ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 48 தனியார் மருத்துவமனைகளை அரசு அடையாளம் கண்டுள்ளது. 24 அரசு மருத்துவமனைகளில் தேதி கிடைக்காத நோயாளிகள், இந்த தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கு பைபாஸ் அறுவைசிகிச்சை, கிட்னி, தைராய்டு உள்ளிட்ட 54 உயிர்காப்பு அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம் என்று டெல்லி அரசு அடையாளப்படுத்தியுள்ளது.
மாநில அரசு ஒன்று இத்ததகைய திட்டத்ததை அறிவிப்பது இதுவே முதன்முறை. இன்றைய தினத்தில் நோயைப் பற்றிய கவலையை விட, அதன் சிகிச்சைக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற கவலைதான் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் நோயாளிகள் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளிகளும் சிறந்த மருத்துவச் சிகிச்சையை டெல்லி அரசு உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment