நகரும் புகைப்படம் எடுக்கும் கூகுலின் புதிய ஆப்
புதிய முறையில் புகைப்படம் எடுக்க ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காக கூகுல் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் நகரக்கூடிய புகைப்படங்களை (Motion stills app) எடுக்க முடியும். தற்போது ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் 11 இயங்குதள ஃபோன்களுக்கும் வெளியிட உள்ளது கூகுல்.
இந்த ஆப் மூலம் நகரும் புகைப்படத்தை கிஃப் ஃபைல் மற்றும் அனிமேடட் புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே இதுபோன்ற அப்-கள் நிறைய உள்ள நிலையில், கூகுல் தற்போது வெளியிட்டுள்ள நகரும் புகைப்படம் எடுக்கும் ஆப் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுமையான முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆப்-ன் அடுத்த அப்டேட்-ல் மேலும் பல சிறப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு பெரிய வீடியோவை 60 வினாடிகள் கொண்ட பல வீடியோக்களாக வெட்டி எடுக்கமுடியும். அந்த வீடியோக்களை 8 மடங்கு வேகத்திலிருந்து 1 மடங்கு வேகம் வரை நமக்கு ஏற்றவாறு வேகத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதற்குப் பெயர் ஃபாஸ்ட் ஃபார்வார்டு. புகைப்படம் எடுக்கவும், அதை நமக்கேற்றவாரு மாற்றி மற்றவர்களிடம் பகிர்வதற்க்கும் இந்த ஆப் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுல் கூறுகிறது.
Comments
Post a Comment