அரசு ஊழியர்களின் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் !!
கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை பதுக்குபவர்கள்
மற்றவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்துவதை பொருளாதார குற்றப் பிரிவினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, நிதி புலனாய்வு பிரிவினர் வங்கி நடவடிக்கைகளில் நடக்கும் பண பரிமாற்றங்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கருப்பு பணம் பதுக்கலில் அரசு ஊழியர்களும் ஈடுபட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய கமிஷனர் பாசின் கூறுகையில், “நிதி புலனாய்வு பிரிவு அளிக்கும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தினோம். அந்த தகவல்கள் திருப்தி அளிக்கின்றன. தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிவிசி தவிர அமலாக்கத்துறை, சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி, செபி, தேசிய புலனாய்வு ஏஜென்சி, மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பிற நிறுவனங்களிடமும் நிதி புலனாய்வு பிரிவு தகவல்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment