ஜியோ போனை டிவி உடன் இணைத்து பார்க்கலாம். !!

ஜியோ போனை டிவி உடன் இணைத்து மொபைல் திரையில் என்ன செல்கின்றதோ அதனை அப்படியே தொலைக்காட்சி பெட்டிகளில் பார்க்கலாம். !!

ஜியோ போன் கேபிள் டிவி விரைவில் வெளிவர இருக்கின்றது. இது கேபிள் டிவி செட்-ஆ பாக்ஸ்சினை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுக் கேபிள் டிவி சேவையினை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் டிவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ஜியோ போன் பயனர்கள் தங்களது விருப்பனான டிவி, திரைப்படங்கள் 
மற்றும் கல்வி சார்ந்த தொலைக்காட்சி சேவைகளை மொபைல் போன் மூலமாகப் பார்த்து மகிழலாம் என்று அறிவித்துள்ளார்.
தொலைதூர கிராமங்கள்
இந்தியாவில் உள்ள பல தொலைதூர கிராம்களில் கேபிள் டிவி மற்றும் இணையதளச் சேவைகள் கிடைக்காத நிலையில் எங்களது தொழில்நுட்ப பொறியாளர்கள் புதிய திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளனர்.
அதுதான் ஜியோ போன் டிவி என்றும் தெரிவித்தார்.


ஜியோ போன் டிவி
ஜியோ போன் டிவி ஸ்மார்ட் டிவி மட்டும் இல்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளிளும் ஜியோ போன் இணைப்பினை அளிப்பதன் மூலம் தொலைக்காட்சி சேவைகளினை பெற்று மகிழலாம். இதற்காக ஜியோ பயனர்கள் புதிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


ஜியோ போனை டிவி ஆகப் பயன்படுத்துவது எப்படி?
தற்போது அனைத்துத் தொலைக்காட்சி சேனைகளும் தங்களது சேவையினை இணைத்ததிலும் லைவாக வழங்கி வருகின்றனர். ஜியோ போன் டிவி கேபிள் சேவையினைப் பயன்படுத்தி நீங்கள் எளிமையாக டிவி உடன் இணைத்துப் பயன்பெறலாம்.


செட் ஆ பாக்ஸ் போன்று சாதனம் ஏதேனும் வேண்டுமா?
ஆம், அதற்கு நீங்கள் கண்டிப்பாக உங்கள் போனை டிவி உடன் இணைக்கக் கூடிய சாதனம் ஒன்றை வாங்க வேண்டும்.


அந்தச் சாதனம் எதற்கு?
ஜியோ போனை டிவி உடன் இணைத்து மொபைல் திரையில் என்ன செல்கின்றதோ அதனை அப்படியே தொலைக்காட்சி பெட்டிகளில் பார்க்கலாம். எனவே எப்போது எல்லாம் மொபைல் போனில் டிவி பார்க்க விரும்புகின்றீர்களோ அதனை டிவி-லும் பார்த்து மகிழலாம்.


இணையதளம் மற்றும் தரவு எவ்வளவு தேவைப்படும்?
முகேஷ் அம்பானி 4 முதல் 5 மணி நேரம் வரை ஜியோ போன் உதவியுடன் டிவி பார்க்க 4ஜி இணையம் மற்றும் 512 எம்பி தரவு இருந்தால் டிவி பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


யாருக்கு இது அதிகப் பயன் அளிக்கும்?
பொதுவாக யாரெல்லாம் அதிகமாக டிவி பார்க்க மாட்டார்களோ அவர்களுக்கு இந்த ஜியோ போன் கேபிள் டிவி டிடிஎச் கட்டணங்களைக் குறைக்க உதவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank