கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இனி கட்டாயமில்லை: மத்திய அரசு
கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனி கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய உயர்கல்வி தொடர்பான நாள் தேசிய கருத்தரங்கு, தில்லியில் ச
னிக்கிழமை தொடங்கியது.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்து கொண்டு பேசியதாவது:
பல்கலைக்கழக பேராசியர்கள் தங்களின் பதவி உயர்வுக்காக, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே வழிமுறைதான், கல்லூரி ஆசிரியர்களுக்கும் தற்போது பின்பற்றப்படுகிறது. ஆனால், இவர்கள் 2 பிரிவினருக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது.பொதுவாக, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணியையே கல்லூரி ஆசிரியர்கள்மேற்கொள்கிறார்கள். ஆராய்ச்சியை கட்டாயமாக்கினால், ஆராய்ச்சி பணியானதுமுழுவதும் நின்றுவிடும். ஏதேனும் காரணத்துக்காக (பதவி உயர்வுக்கு) ஆராய்ச்சியை மேற்கொண்டால், அது ஆராய்ச்சியின் தரத்தை பாதிக்கும்.எனவே, கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை கட்டாயமாக மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவை நீக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதேநேரத்தில், பதவி உயர்வுக்காக, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுடனான தங்களது பங்களிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment