ஜிஎஸ்டிக்கு ஆப்பு வைத்த தமிழர்கள்..!!
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு சில பொருட்களின் விலை ஒரு பக்கம் குறைந்தும் மறுபக்கம் விலை அதிகரித்தும் காணபடுகிறது..
ஒரு சில பொருட்களுக்கு மட்டும் விலை அதிகமாக இருந்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி வரி விகிதமும்,
விலை குறைவாக இருந்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி வரி விகிதமும் உள்ளது..
இதனைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திய, சென்னையைச் சேர்ந்த சில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி குறைந்தபட்ச வரி விகிதத்திலேயே விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்..
சென்னை சேர்ந்த ஒரு செறுப்பு கடைக்காரர் ஒரு ஜோடி செருப்பு வாங்க ஒன்றாக பில் போடாமல்,
இரண்டு செறுப்பிற்கும் தனித் தனியாகப் பில்போட்டு வரியைக்கணிசமாக குறைத்துள்ளார்..
அது எப்படி??
ஒரு ஜோடி செருப்பை சேர்த்து வாங்கினால் 12% வரி ஆனால் தனித்தனியாக வாங்கினால் 5% வரி தான்.. 2% குறைகிறது
இதுவே ஒரு ஜவுளி ஆடைகள் கடைகாரர் தான் விற்கும் சுடிதார்களை டாப்ஸ், துப்பட்டா, பேண்ட் என மூன்றையும் தனித்தனியாகப் பில் போட்டு விலை குறைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளார்..
பாஸ்மதி அரசி விற்பனையாளர் ஒருவர் டிரேடு மார்க் உள்ள அரிசிக்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்பதால் தனது டிரேடு மார்க்கை வேண்டாம் என்று திருப்பி அளித்துள்ளார்
ஒருவகையில் இது வணிகர்களுக்கு லாபம் என்றாலும், மக்களுக்கும் லாபம் தான்…ஜிஎஸ்டி வரியிலிருந்து கணிசமாக குறைந்தே காணபடுகிறது..
Comments
Post a Comment