தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டக்களத்தின் செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியரகள் பல்லாயிரக்
கனக்கானோர்
சென்னை வந்த நிலையில் போராட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் இரவு 10 மணிக்கு மேல் பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகினர்.
பலர் மன வேதனையுடன் ஊருக்கு திரும்ப சென்றுவிட்டனர் இருப்பினும் *நம் ஆசிரியர்களின் போராட்ட குணத்தால் பலரும் போராட்டம் நடைபெறும் வள்ளுவர் கோட்டம் வரவும் என்ற செய்தி பரவியது. போராட்ட ஏற்பாட்டளர்களும் உறுதி செய்தனர்.* *பின்னர் காலை 11.00 பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டத்திற்க்கு அனுமதி அளித்தனர்.*
இதனை தொடர்ந்து *பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 1500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஆசிரியர்கள் சங்கத் தலைவத்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாநில நிர்வாகிகள் பேசினார்கள் பணிநிரந்தர கோஷம் போடப்பட்டது.*
*பின்னர் காவல்துறை மூலம் பேச்சு*
*வார்த்தை நடத்த 5 நபர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.*
காவல்துறை மூலம் *இக்குழுவினர் பள்ளிக் கல்வித்துறை செயலாளரை சந்தித்தனர் அப்பொழுது பணிநிரந்தரம் அரசின் முடிவு.* *உடனடியாக 4 கோரிக்கையை 4 நாட்களில் மற்ற துறை செயலாளர்களுடன் கலந்து பேசி படிப்படியாக நிறைவேற்றுகிறேன் என்றும் நீங்கள் தற்காலிகமாக போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் க தெரிவித்தனர்.*
*1. பகுதிநேர பணி மாறுதல்*
*2. பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.*
*3.மாணவர்கள் நலன் கருதி முழு நாள் வேலை வழங்குதல்.*
*4.காலமுறை ஊதியம் பின்னர் பணிநிரந்தரம் குறித்து தமிழக அரசுடன் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்ததாக பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்தனர்.* *இதனை தொடர்ந்தும் போராட்டம் தொடர்ந்தது.* *காவல்துறை கைது செய்ய ஆயத்தமானது.* *இதனை தொடர்ந்து பேசிய மாநில நிர்வாகி திரு.என்.வெங்கடேன்*
*காவல்துறை
அதிகாரிகள்
பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கடந்த முறை நாம் வாய்ப்பு கொடுக்காமல் போராட்டத்தை தொடர்ந்து கைதானோம்.*
*இந்த முறை அவர்களது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கலைந்து செல்வோம்.* *4 நாட்களில் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் பள்ளிக் கல்வித்துறை செயலாளரை சந்தித்த அதே 5 நபர்களை பேச்சு வார்த்தைக்கு அனுப்புவோம்.* *அவர்கள் பேசிய நிகழ்வு குறித்து மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து மிகப்பெரிய கட்டமைப்புடன் கூடிய மாபெரும் போராட்டம் காவல்துறை அனுமதியுடன் நடைபெறும்.
*என அண்ணன் திரு.வெங்கடேசன் கூறினார். உடன் மாநில நிர்வாகிகள் சேசுராஜா,வெ.முருகதாஸ், மணிவண்ணன், ஜெயச்சந்திர பூபதி, பழ.கெளதமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.* *இன்று உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல்*
*பழ.கெளதம் மற்றும் வைகோ குறித்த இன்றைய காலைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*இனி நாம் அனைவரும் ஒருங்கினைந்து வெற்றி பெறுவோம்.* *இப்போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்த மற்றும் போரட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகள், காவல்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி*
*இவன்*
*திருவண்ணாமலை எஸ்.சிவா
Comments
Post a Comment