அமெரிக்கா தப்பித்தது.. இந்தியா மாட்டிக்கொண்டது..!


தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஒரு பெரிய மறுசீரமைப்பை



மேற்கொண்டுள்ளது, இதனால் தனது நிறுவனத்தில் பணிபுரிய உலகத் தொழிலாளர்களில் 3,000 நபர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பிறந்த சத்யா நதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மறுசீரமைப்பின் கீழ் பணிநீக்கம் செய்வதில் பெரும்பாலும் விற்பனை பிரிவை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், 3000 நபர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் சிஎன்பிசி தெரிவித்துள்ளது சிறந்த சேவை வழங்க முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கு மாற்றங்களை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளது.

நிலைகள் அகற்றப்படும் என்று அறிவிக்க நடவடிக்கை
சில பணியாளர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படுகின்றன அல்லது அவற்றின் நிலைகள் அகற்றப்படும் என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் எல்லா நிறுவனங்களையும் போலவே, எங்கள் வணிகத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோம், அதனால் சில இடங்களில் அதிக முதலீடு செய்யலாம், என்றும் ஊழியர்களை மாற்றி அமர்த்தலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் வெளியேற்றப்படும் ஊழியர்களின் விகிதம்
மைக்ரோசாப்ட் விற்பனை பிரிவில் இருந்து மொத்தமாக 10 சதவீதம் ஊழியர்களை வெளியேற்றலாம் என்றும் அதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் அமெரிக்காவைத் தவிரப் பிற நாடுகளில் உள்ளவர்கள் என்றும் நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

அஸ்யூர் மென்பொருள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது கிளவுட் தயாரிப்பான அஸ்யூர் மென்பொருளை விற்பனை செய்வதில் அதிகக் கவனம் செலுத்த இருப்பதாகவும், கடந்த சில காலாண்டுகளாகக் கிளவுட் பிரிவு தான் அதிக அளவில் வணிகத்தை அளித்துள்ளது என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது அமேசானுடன் போட்டி
சென்ற காலாண்டில் மட்டும் மைக்ரோசாப்டின் அஸ்யூர் விற்பனை 93 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரம் அமேசான் மிகப் பெரிய போட்டியாளர்களாக உள்ளனர், எனவே மொக்ரோசாப்ட் தனது மென்பொருள் மறுசீரமைப்பை மேற்கொண்டு வருவதினால் சேவையாக உள்ள மென்பொருள் பிரிவை சேவை மற்றும் உள்கட்டமைப்பாக மற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பிட்ட சில பிரிவுகள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களைக் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்காக அதிகப்படியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் அதனால் அதிகளவு விற்பனை நடக்கும் என்றும் கூறுகின்றது.

மொத்த ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 71,000 ஊழியர்கள் பணி புரிகின்றனர், பிற நாடுகளில் 121,000 ஊழியர்கள் பணி புரிவது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank