'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை


      நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின்
எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக அரசின் குழப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்; மற்றவை நிர்வாக ஒதுக்கீட்டிற்குரியவை.

கலந்தாய்விற்குரிய படிப்புகளில் சேர, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் மிக அதிகப்படியாக, 53 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ அட்மிஷன் குழப்பம் காரணமாக, வேளாண் படிப்பிற்கு ஏற்பட்ட கிராக்கியால், விண்ணப்பங் களின் எண்ணிக்கை கணிசமாக கூடியதாக, வேளாண் பல்கலை தெரிவித்தது. பலரும் மருத்துவக் கலந்தாய்விலும் பங்கேற்க வுள்ளதால், ஒரிஜினல் சான்றிதழ் களை சமர்ப்பித்து, கட்டணத்தை செலுத்த முன்வர வில்லை. இதனால், காலி இடங்கள் பட்டியலில் அந்த இடங்களும் சேர்ந்தன. எனினும், இதுதொடர் பான அதிகாரப்பூர்வ காலியிட அறிவிப்பை, வேளாண் பல்கலை வெளியிட வில்லை.

இருப்பினும், ஜூலை, 12 - 17 வரை அறிவிக்கப் பட்டிருந்த இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு, பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மிகுந்த எதிர்பார்ப்புடன்காத்திருந்தனர்.இந் நிலையில், வேளாண் படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வை ரத்து செய்வதாக வும், மருத்துவக் கலந்தாய்வு முடிந்தபின், பின்னொரு நாளில் நடத்தப்படும் என்றும், தமிழக சட்டசபையில்,வேளாண் அமைச்சர் அறிவித்தார்; அதன்பின், கலந்தாய்வும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கடும் பாதிப்பு

'நீட்' காரணமாக, மருத்துவக் கலந்தாய்வு நடத்துவ தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, குழப்பங்கள் நேரிட்டுள்ளன. மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, 85 சதவீதம், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 15 சதவீதம் என ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, புதிய தகுதி பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில், மாநில பாடத்திட்ட மாணவர் களும், சி.பி.எஸ்.இ., மாணவர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டு உள்ளது.தீர்ப்பு எப்படி இருக்கும், அதன் பிறகாவது மருத்துவ கலந்தாய்வு நடந்து, தங்களது வேளாண் கலந்தாய்வுக்கு வழி பிறக்குமா அல்லது வேறு வகையான சிக்கல்கள்முளைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள்.
'நீட்' விலக்கு:மத்திய அரசு பரிசீலனை

''நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசியல் தலைவர்கள் வைத்த கோரிக்கையை, மத்திய அரசு பரிசீலிக்கும்,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளீதர ராவ் தெரிவித்தார். மதுரை விமான நிலை யத்தில், அவர் கூறியதாவது: தமிழக முதல்வரின் 

ஜூன், 19 - 24 வரை நடந்த முதற்கட்ட கலந்தாய்விற்கு, 3,572 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், 1,242 பேர் வரவில்லை; 2,330 பங்கேற்றனர். முதற்கட்ட கலந்தாய்விலேயே, மொத்தமுள்ள, 2,360 இடங்களில், 2,147 இடங்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டன; மீதம், 213 இடங்கள் மட்டுமே இருந்தன.

கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் பலரும், மருத்துவப் படிப்பிற் கும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ஜூன், 29 தேதிக்குள், ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, அட்மிஷனை உறுதி செய்து கொள்ளுமாறு, வேளாண் பல்கலை அறிவித்தது.ஆனால், அவர்களில் கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையில் இருந்த, 71 மீனவர்களை விடுதலை செய்ய, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்; இது, மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்கும், தமிழக தலைவர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

வகுப்பே துவங்கியாச்சு வருங்கால கனவும் போச்சு

வேளாண் கலந்தாய்விற்கு காத்திருக்கும் மாணவ, மாணவியர் கூறியதாவது:வேளாண் கலந்தாய்வு விஷயத்தில், தமிழக அரசு எங்களை வஞ்சித்துவிட்டது. முறையாக திட்ட மிடாமல், அரைகுறையாக கலந்தாய்வை நடத்தி, இரண்டாம் கட்ட கலந்தாய்வையும், ரத்து செய்துவிட்டது. வேளாண் படிக்க இடம் கிடைக்குமா என எங்களுக்கு தெரியவில்லை.

இதற்காக காத்திருப்பதால், மற்ற கல்லுாரி களில் கலை, அறிவியல் படிப்புகளில் சேரவும் முடியவில்லை; சேர்ந்தால் அங்கு கல்விக் கட்டணத்தை செலுத்த நேரிடும். அங்கு அட்மிஷன் முடிந்து, வகுப்புகளும் துவங்கி விட்டன. வேளாண் கலந்தாய்வு நடந்து, இங்கு இடம் கிடைத்தால்,அங்கு செலுத்திய தொகையை இழக்க வேண்டி வரும் என்பதால், எங்களில் பலரும், இன்னும், வேளாண் கலந்தாய்வை மட்டுமே நம்பிஉள்ளோம்.

மருத்துவக் கலந்தாய்வு நடக்குமா, அப்படியே துவங்கினாலும், வேளாண் கலந்தாய்வு எப்போது நடக்கும், அங்கு எவ்வளவு இடங்கள் காலி உள்ளன என்பதெல்லாம், புரியாத புதிரா கவே நீடிக்கிறது. இத்தனை குழப்பங்களுக்கும், இனிமேலாவது, ஒரு நல்லமுடிவை அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)