வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்' அறிமுகம்
உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நா
ள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புது புது வசதிகளை அறிமுகம் செய்து அப்டேட் செய்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. பல மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் மாநில அரசுகளால் பயன்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆப்ஸ் தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் இல்லாத வசதி :
கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.
அரசுகளின் வரவேற்பு :
சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலின் போது கைசாலா ஆப்சை பயன்படுத்தியே தேர்தல் கமிஷன் கருத்துகணிப்புக்களை நடத்தி உள்ளன. ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த ஆப்சை பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆப்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறார்.
Comments
Post a Comment