மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி !!
பேரவையில் நேற்று மயிலம் மாசிலாமணி (திமுக) சிறப்பு
கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து, மருத்துவ முதுகலை மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுமா என்று ேகட்டார். இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்: தற்போது உள்ள 205 உயர் சிறப்பு
மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்புவதில் தமிழகத்திற்கான உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு சுகாதாரத் துறை செயலாளர் மத்திய அரசிடம் 50 சதவீதம் சர்வீஸ் கோட்டா நிலைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள முதுகலை மருத்துவ மேற்படிப்பு இடங்கள் 1097 மற்றும் முதுகலை டிப்ளமோ இடங்கள் 396க்கான கலந்தாய்வு முடிந்தாலும் மாணவர்களின் நலனை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நீட் மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறுவதால்தான் 85 சதவீத உள்ஒதுக்கீடு முறையை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்த அரசாணைக்கான உரிய விளக்கத்தை அரசு வழங்கி மாணவர்களின் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank