ஐ.எம்.பி.எஸ்., கட்டணம்; ரத்து செய்தது எஸ்.பி.ஐ.,
'சிறிய அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 1,000 ரூபாய் வரையிலான, ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளுக்கு, இனி, எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது' என, எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.
கட்டணம்:
ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து, மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு, 'இன்டர்நெட் பேங்கிங்' மூலமோ, மொபைல் போன் வாயிலாகவோ, ஐ.எம்.பி.எஸ்., எனப்படும், உடனடி மின்னணு பணப் பரிவர்த்தனை முறையில், பணம் அனுப்ப முடியும். அந்த வகையில், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும், 1,000 ரூபாய் வரையிலான ஒரு பரிவர்த்தனைக்கு, ஐந்து ரூபாய் கட்டணமும், அதற்கான சேவை வரியும் விதிக்கப்பட்டது. தற்போது, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துள்ளதால், வங்கிப் பரிவர்த்தனை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரத்து:
இந்நிலையில், சிறிய அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 1,000 ரூபாய் வரையிலான, ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளுக்கு, இனி, எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என, அந்த வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு பரிவர்த்தனைகள் மேற்கொள்வோருக்கு, இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment