எழுத்து தேர்வில் அசத்தியவர்கள் உடற்தகுதி தேர்வில் 'அவுட்'
போலீஸ், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற, இன்ஜினியரிங் பட்டதாரிகள், உடற்தகுதி தேர்வில்,
வெற்றி பெற முடியாமல், பரிதாபமாக அவுட்டாகி வெளியேறி உள்ளனர்.
6.32 லட்சம் பேர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, போலீஸ், சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள, 15 ஆயிரத்து, 711, இரண்டாம் நிலை காவலர்கள், காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வுக்கு, ஜன., 23ல் அறிவிப்பு வெளியானது.
தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; மே, 21ல் நடந்த எழுத்து தேர்வில், 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, ஜூலை, 7ல், இணையதளத்தில் வெளியானது.
வெற்றி பெற்றவர்களில், 18 சதவீதத்தினர், அதாவது, 16 ஆயிரத்து 185 பேர், இன்ஜினியரிங் பட்டதாரிகள்; 20 சதவீதத்தினர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள்.
வெற்றி பெற்ற, 90 ஆயிரத்து, 185 பேருக்கு, உடல் தகுதித் தேர்வுகளுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது; ஜூலை, 27ல்,
உடல் தகுதி தேர்வுதுவங்கியது.
கடந்த மூன்று நாட்கள் நடந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட, இன்ஜினியரிங் பட்டதாரிகளில், பெரும்பாலானோர், தோல்வியை சந்தித்து வெளியேறி உள்ளனர்.
3 சதவீதத்தினர் தேர்ச்சிஉடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டஇன்ஜினியரிங் பட்டதாரிகளில், 3 சதவீதத்தினர்
மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 400 மீ., ஓட்டத்திலும், வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று நாட்கள் நடந்த தேர்வில், பிளஸ் 2, விளையாட்டு வீரர்கள், ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் தான், அதிக அளவில் தேர்ச்சி பெற்று
உள்ளனர்.குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப் புற மாணவர்கள் தான், அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Comments
Post a Comment