தங்கத்தைக் கக்கும் பாக்டீரியாக்கள்! வியப்பை ஏற்படுத்திய ஆய்வாளர்கள்
தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் தான் கிடைக்கும் என்பது பலரும் அறிந்த விஷயம் .
ஆனால் ஒரு வகையான நுண்ணுயிரிகளான பாக்டீரியா
விலிருந்து கூட தங்கத்தை எடுக்க முடியும் எனக் கூறி வியக்க வைக்கின்றனர்.
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள். சுப்ரியாவிடுஸ் மெட்டால்லிடூரன்ஸ்( cupriavidus metallidurans) என்றழைக்கப்படும் ஒரு வகைப் பாக்டீரியா தான் தங்கத்தை கொடுக்கிறது . விஷத்தை தங்கமாக மாற்றும் முயற்சி தான் இது தங்க அயனிகள் தண்ணீரில் கரையும் போது பாக்டீரியா விஷமாக மாறி போகிறது.
இதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள டெல்டிபாக்டின் என்ற புரதத்தை அது உருவாக்குகிறது. இதுவொரு கவசமாக செயல்பட்டு விஷம் கலந்த அயனிகளை பாதிப்பு இல்லாத தங்கத் துகள்களாக மாற்றி தனது செல்களின் வெளியே குவித்து விடுகிறது.
இந்தப் பாக்டீரியா. பரிசோதனைக் கூடத்தில் பாக்டீரியாவை வைத்து விட்டு, கோல்டு குளோரைடை உள்ளே செலுத்தினால் ஒரு வாரத்தில் அது அனைத்தையும் தங்கமாக மாற்றி விடுகிறது என இவர் சொன்னார்.
இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்வதனால் பின்னாளில் இந்தப் பாக்டீரியாவைக் கொண்டு தண்ணீரில் கரைந்த தங்கத்தைப் பிரித்து எடுக்க முடியும் எனவும்ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment