பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தெரிவிக்க, புதிய இணையதளம் !!
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தெரிவிக்க, புதிய இணையதளம் ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த இணையதளத்துக்கு ஷீ-பாக்ஸ்(‘SHe-box’) அதாவது, பாலியல் தொந்தரவுகளை தெரிவிக்கும் பெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பணிபுரியும் இடங்களில் பெண்கள் அளவுக்கு அதிகமான பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று ஏராளமான புகார்கள் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு வந்தன. இதையடுத்து, பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்க தனி இணையதளம் அமைக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சகம் தொடங்கி, இப்போது செயலாக்கியுள்ளது.
இது குறித்து மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், “ பெண்கள் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது குறித்தும், அளவுகள் குறித்தும் தேசிய அளவிலான ஆய்வு நடத்த உள்ளோம். நாங்கள் அறிமுகப்படுத்தயுள்ள இந்த இணையதளம் பெண்கள் புகார்களைத் தெரிவித்தால், விரைவாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Comments
Post a Comment