சீனாவில் உலகின் முதல் வன நகரம்!!!

உலகின் முதல் வன நகரத்தை தெற்கு லியுஜூயு பகுதியில் சீனா

வடிவமைத்து வருகிறது. நாட்டின் சுற்றுச்சூழல் மாசுபாட்டு பிரச்னையை சரிசெய்வதற்காக இந்த நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நகரில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் மரங்கள், செடிகளால் ஆனதாக அமைக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 900 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் இந்த நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் பசுமை சூழ்ந்ததாக அமைக்கப்படும் இந்த நகரில் 40,000 மரங்கள் உள்ளன.
சுமார் 100 வகைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் செடிகள் நடப்பட உள்ளது. இவற்றால் 10,000 டன் கார்பன் டை ஆக்சைடு உட்கொள்ளப்படும். ஆண்டுக்கு 57 டன்கள் மாசுபாடு இந்த செடிகளால் கிரகிக்கப்படும். இந்த நகரில் போக்குவரத்திற்காக அதிவிரைவு ரயில் தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே இந்த நகரில் இயக்கப்படும்.
இயற்கை சார்ந்த இந்த நகரின் மின்தேவைகள் சோலார் மற்றும் ஜியோதெர்மல் (புவியில் இருந்து வெளியேறும் வெப்பம்) மூலம் பெறப்படும் வகையில் இந்நகரம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் மரங்கள், செடிகள் வளர்க்கப்படுவதற்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட்டு வருகிறது. 2020 ம் ஆண்டிற்குள் இந்த வன நகர பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு, 30,000 பேர் குடியமர்த்தப்பட உள்ளனர்

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)