டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு... வந்திடுச்சு மொபைல் "ஆப்"
"ஆப்" மொபைல் "ஆப்" வந்திடுச்சு... எதற்காக தெரியுங்களா? தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் குறித்து, 'மொபைல் ஆப்' மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகவலை பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, உடுமலை, பழநி போன்ற கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 3,000த்துக்கும் அதிகமான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டெங்கு பாதிப்பை தடுக்க, சிறப்புக்கவனம் செலுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு, 'இந்தியா பைட்ஸ் டெங்கு' என்ற பெயரிலும், தமிழக அரசு, 'டெங்கு பீவர் தமிழ்' என்ற பெயரிலும், 'மொபைல் ஆப்'களை துவக்கி உள்ளன.
'ஸ்மார்ட் போன்' வைத்துள்ள அனைவரும், இந்த, 'மொபைல் ஆப்'களை பதிவிறக்கம் செய்து, டெங்கு பற்றிய விழிப்புணர்வு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment